இந்திரா நகர் தொகுதியில் இலவச அரிசி வழங்கல்
புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட காந்தி நகரில், அரசு கொறடா ஆறுமுகம், இலவச அரிசியை பொதுமக்களுக்கு வழங்கினார்.புதுச்சேரியில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட காந்தி நகரில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசியை, அரசு கொறடா ஆறுமுகம் பயனாளிகளுக்கு வழங்கினார்.இதையடுத்து, 1.32 கோடி மதிப்பில், பழுதடைந்த பாதாள சாக்கடை மறுசீரமைப்பு, பணியை அரசு கொறடா ஆறுமுகம் துவங்கி வைத்தார்.