உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

 : அரியாங்குப்பம்: அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் ரெயின்கோட், ராமு எம்.எல்.ஏ., வழங்கினார். மணவெளி தொகுதி நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக ராமு எம்.எல்.ஏ., 10 ம்வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு  சீருடை மற்றும் ரெயின்கோட் வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  பள்ளி பொறுப்பாசிரியர் சிவகாமி நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை