சுனாமி குடியிருப்பில் சூதாட்டம்: 8 பேர் கைது
காரைக்கால் : காரைக்கால் சுனாமி குடியிருப்பில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார், நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, கோட்டுச்சேரி அக்கம்பேட்டை சுனாமி குடியிருப்பு மீனவர் சங்க கட்டடத்தின் முன்புறத்தில், ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியதை போலீசாரை பார்த்தவுடன், அந்த கும்பல் தப்பி ஒடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கோட்டுச்சேரி அக்கம்பேட்டை சுவாமி நகரை சேர்ந்த தர்மபூபதி, சித்ரவேல், பெருமாள், பொன்னையன், குமார், பெரியசாமி, ராஜேஷ், ராஜசேகர் ஆகிய 8 பேர், பொது இடத்தில், பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2,800 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.