உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காந்தி ஜெயந்தி விழா..

காந்தி ஜெயந்தி விழா..

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடற்கரைச் சாலையில் நடந்த விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன்,துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், பிரகாஷ்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., அஜித் குமார் சிங்லா மற்றும் அரசு செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, மும்மத பிரார்த்தனை, பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேச பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய ஊழியர்களின் நுால் நுாற்பு நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை