உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. விநாயார் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழா முடிந்து மூன்றாம் நாளான நேற்று பொது இடங்கள் மற்றும் வீட்டில் பூஜை செய்த விநாயகர் சிலைகளை பொது மகக்ள் எடுத்து சென்று புதுச்சேரி  கடலில் பூஜை செய்து கரைத்தனர்.  அதே போன்று, நல்லவாடு கடற்கரை, வீராம்பட்டினம் கடற்கரை, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு, புதுகுப்பம் ஆறு, அரியாங்குப்பம் ஆறு, வில்லியனுார் சங்கராபரணி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி