உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கலெக்டர் அலுவலகம் முற்றுகை காங்., நிர்வாகிகள் கைது

 கலெக்டர் அலுவலகம் முற்றுகை காங்., நிர்வாகிகள் கைது

புதுச்சேரி. நவ. 23-: வாக்காளர் தீவிர திருத்த பணியை ரத்து செய்ய வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்., சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடந்தது. இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மாநில செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் வழுதாவூர் சாலையில் உள்ள வி.வி.பி., நகரில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, தேர்தல் ஆணையர் உருவ பொம்மையை பாடையில் வைத்து துாக்கி வந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்ய முயலவே, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவழியாக போலீசார், உருவப் பொம்மையை பறிமுதல் செய்து அகற்றினர். அதனைத் தொடர்ந்து காங்., கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்கவே மீண்டும் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து கோஷமிட்டனர். அதனையொட்டி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். காங்., கட்சியினரின் போராட்டத்தால், வழுதாவூர் சாலையில் வி.வி.பி., நகர் முதல் ராஜிவ் சதுக்கம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை