உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 8 பேரிடம் ரூ.22.54 லட்சம் அபேஸ் மோசடி கும்பலுக்கு வலை

8 பேரிடம் ரூ.22.54 லட்சம் அபேஸ் மோசடி கும்பலுக்கு வலை

புதுச்சேரி : புதுச்சேரியில், 8 பேரிடம் 22.54 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், தனியார் வேலை வாய்ப்பு கன்சல்டன்சியில், அரசு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார்.அந்த நிறுவனத்தில் பேசிய நபர் அரசு வேலை கிடைக்க முன்பணம் 20 லட்சம் கொடுக்க வேண்டும் என, கூறினார். அதை நம்பி, 20 லட்சத்தை, அந்த நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.ஆனந்தரங்கபிள்ளை நகரை சேர்ந்தவர் கணேசன். இவரை தொடர்பு கொண்டவர், தொலை தொடர்பு துறை அதிகாரி என, பேசினார். உங்கள் மொபைல் மற்றும் ஆதார் எண் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளது. அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்ப வேண்டும் என, கூறினார். அதற்கு பயந்து, 99 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.மேலும், பாகூரை சேர்ந்த நந்தன், 40, ஆயிரம், சுல்தான்பேட்டை முகமது அசார், 35 ஆயிரம், சேலிய மேடு ராமலிங்கம் 10 ஆயி ரம், ஐயங்குட்டிபாளையம் ஜெயேஷ்குமார் 15 ஆயிரம், முத்தியால்பேட்டை ஆகாஷ், 24 ஆயிரம், தவளக்குப்பம் அமுதன், 31 ஆயிரம் ரூபாயை, தனித்தனி நபர்களிடம் அனுப்பி ஏமாந்தனர்.இதுகுறித்து 8 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ