உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாவரங்களின் மரபணு பொறியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேச்சு

தாவரங்களின் மரபணு பொறியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேச்சு

புதுச்சேரி : எதிர்காலத்தில் தடுப்பூசிகள் தயாரிக்க தாவரங்களின் மரபணு பொறியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த மூன்று நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக., துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார்.கருத்தரங்கில் விழா மலரை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டு பேசுகையில், 'எதிர்காலத்தில் கொரோனா போன்ற சூழ்நிலையைச் சமாளிக்கவும், ஊட்டச்சத்து தேவைகளுக்கும், தடுப்பூசிகள் தயாரிப்பதற்கும் தாவரங்களின் மரபணு பொறியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.கோவிஷீல்ட் தடுப்பூசியானது, கிட்டத்தட்ட 90 சதவீதம் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கியது. இது வழக்கமான வெப்பத்தால் கொல்லப்படும் வைரஸ் அல்லது ஒரு மரபணு தடுப்பூசியாகும்' என்றார்.பத்ம விருது பெற்ற முன்னாள் துணைவேந்தர்கள் சுதிர் சோபோரி, பிரமோத் டாண்டன், பேராசிரியர் தீபக் பெண்டல்,தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷசானி ஆகியோர் பங்கேற்று பேசினர்.கூட்டத்தில், தாவர உயிரித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகள் இயக்குனர் கிளமென்ட் லுார்து, உயிரியல் பள்ளியின் டீன் பிரதாப் ஷெட்டி, டாக்டர் அபிஷேக் மொண்டல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்