உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி

புதுச்சேரி : திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 53. இவர், தனது மனைவி அன்புமலர், மகன் ஹேமச்சந்தர், 20, மகள் சுஜயா, 11, ஆகியோருடன் புதுச்சேரி, அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனை வளாகத்தில் உள்ள அப்பார்ட்மென்ட், 5 மாடியில் உள்ள அவரது தம்பி சுரேஷ் வீட்டில், வசித்து வருகிறார்.சுரேஷ் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் பொது மருத்துவராக பணி செய்து வருகிறார். சுஜயா திருவாண்டார் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார்.நேற்று முன்தினம் மாலை சுஜயா வீட்டு பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை