உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு

அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு

புதுச்சேரி: உப்பளத்தில், மறுசீரமைப்பு செய்யப்பட்ட அப்துல் கலாம் உழந்தை குடியிருப்பு கட்டடத்தை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.உப்பளம் தொகுதி உடையார் தோட்டம், அப்துல் கலாம் உழந்தை அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 46.77 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தலைமை தாங்கி, அரசு ஊழியர்கள் பயன்பாட்டிற்கு, குடியிருப்புகளை திறந்து வைத்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனுவாசன், உதவிப் பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலைப்பொறியாளர்கள் ராமன், பிருத்தியூஜன், தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி