உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெஸ்ட் புதுச்சேரியை நோக்கி அரசு செல்கிறது சபாநாயகர் செல்வம் நம்பிக்கை

பெஸ்ட் புதுச்சேரியை நோக்கி அரசு செல்கிறது சபாநாயகர் செல்வம் நம்பிக்கை

புதுச்சேரி : பிரதமர் மோடி சொன்னதை போன்று பெஸ்ட் புதுச்சேரியை நோக்கி அரசு சென்றுக்கொண்டு இருக்கின்றது என சபாநாயகர் செல்வம் பேசினார். உயர்மட்ட மேம்பால கட்டுமான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, 2014ம் ஆண்டு முதல் பார்லிமெண்ட்டில் புதுச்சேரி மேம்பாலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் தே.ஜ.கூட்டணி அரசு 2021ம் ஆண்டு அமைந்த பிறகு மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. அது உடனடியாக ஏற்கப்பட்டது. அமைச்சர் நிதின் கட்கரி இத்திட்டத்திற்கு உறுதுணையாக உள்ளார். முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பல முறை பேசி இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளனர். கடந்த 25 நாட்களுக்கு முன் தான் ஒப்புதல் கிடைத்து அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு கேட்கும் அனைத்து திட்டங்களுக்கும் உடனடியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தருகின்றது. புதுச்சேரி ரயில் நிலையம் ரூ.92 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. விமான நிலைய விரிவாக்கத்திற்கும் அரசு ஏற்பாடு செய்து வருகின்றது. பிரதமர் மோடி சொன்னதை போன்று பெஸ்ட் புதுச்சேரியை நோக்கி அரசு செல்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ