வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் பரிதவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
பு துச்சேரி மாநிலத்தில் கடந்த 4ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர்., என்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 962 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளி ஆசிரியர்கள். இவர்கள், வரும் டிச., 4ம் தேதி வரை பள்ளிக்கு செல்லாமல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், அரசு பள்ளி மாணவர்கள், பாடம் நடத்த ஆசிரியர்களின்றி பரிதவித்து வருகின்றனர். 'எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இப்பணியை முடித்து டிச., 5ம் தேதி தான் பள்ளிக்கு செல்வர். அதற்குள் இரண்டாம் பருவத் தேர்வு துவங்கி விடும். சி.பி .எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு மாறியதால், மாணவர்களின் கற்றல் திறன் பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது தேர் தல் துறை பணியால், ஒரு மாதம் எந்த பாடமும் நடத்தபடாத நிலையில், மாணவர்கள் நேரடியாக பருவத் தேர்விற்கு தயாராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களின் கற்றல் திறன் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே எஸ்.ஐ.ஆர்., திருத்த பணியில் தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்களே முழுமையாக ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.