உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 118 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல்

118 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரி : 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வழங்கவும், குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.21.30 லட்சம் மானியம், நகர வளர்ச்சி முகமைக்கு 3.23 கோடி, மின் ஆளுமை திட்டத்திற்கு 15.74 கோடி வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.காலாப்பட்டு சிறையில் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்யவும், காஸ் சிலிண்டர் மானியத்திற்கு ரூ.10.2 கோடி, அரசு மருத்துவமனைகளில் ஆய்வக பொருட்கள், மருந்துகள் வாங்க 25.87 கோடி வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.வனத்துறையில் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் தலா இருவர் ஆலோசகராக செயல்பட அனுப்பிய கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவகாசம் நீட்டிப்பு

அரசு ஊழியர்கள்2 ஆண்டுகளில் துறை தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் அந்த துறைகளில் மேலும் 2 ஆண்டுகள் வரை துறை தேர்வினை எழுத அவகாசம் வழங்கப்படும்.அதன்படி, காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இது போல், 118 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை