| ADDED : ஜன 04, 2024 03:17 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 27 கோப்புகள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இந்த கோப்புகள் அனைத்திற்கும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.காரைக்கால்,திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத்திற்கு 82.74 லட்சம் மானியம், சட்டசபை வாகன பயன்பாட்டிற்கு 42.44 லட்சம் வாகன செலவினம், 29 பட்டியலின மாணவர்களுக்கு 10.56 லட்சம் ரூபாய் வழங்கும் கோப்பிற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.பதவி உயர்வு அடிப்படையில் கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்பவும், லாஸ்பேட்டையில் நிர்வாக தீர்ப்பாயம் துவங்க அரசாணை, சீனியாரிட்டி அடிப்படையில் இளநிலை கணக்கு அலுவலர்கள் நியமனம், விலங்குகள் வதை தடுப்பு சங்கம் மறுசீரமைப்புக்கு அனுமதி அளித்துள்ளார்.மேலும் புதுச்சேரி அரசு இரண்டாம் கட்டமாக பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப நிதித் துறை அனுப்பிய கோப்பிற்கு, நிதி நிலைமைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்ப கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.