உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை

புதுச்சேரி : சித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில், குருபூஜை மற்றும் அன்னமளிப்பு விழா, நாளை நடக்கிறது.வீமக்கவுண்டன்பாளையம், கோரிமேடு சாலையில் சித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு, 24ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, நாளை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், அன்னமளிப்பும் நடக்கிறது.நாளை(18 ம் தேதி) காலை 7:30 மணிக்கு, திருவிளக்கு, புனிதநீர், ஐங்கரன் உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கின்றன. காலை 8:00 மணிக்கு, தமிழில் வேள்வி வழிபாடும், 9:30 மணிக்கு மலர் போற்றி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடும், 10:30 மணிக்கு மஞ்சனம் மற்றும் திருக்குட நன்னீராட்டும் நடக்கிறது.பகல் 12:00 மணிக்கு, மலர் போற்றி, திருமுறை விண்ணப்பம் மற்றும் பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து, 12:15 மணிக்கு, அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ