| ADDED : ஜன 13, 2024 07:02 AM
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில், ஸ்ரீலஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் 150 வது குரு ஆராதனை மற்றும் யோகமகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி 30 வது குரு ஆராதனை விழாநடந்தது.இதையொட்டி, காலை 6.00 மணிக்குகொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து பக்தி பாடல்கள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஸ்ரீகம்பளிசுவாமி மடத்தின் மடாதிபதி டாக்டர் ஆனந்த பாலயோகி கிரி மகாதீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.இதில் 3 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலைமாமணி ஜெகதீசன், காரைக்கால் மேலவாஞ்சூர் ரெங்கய்ய மடம் தமிழினியன் சாமிகள், பேராசிரியர் ராஜேந்திரன், டாக்டர் மதன்மோகன் காளிதாஸ் , ராஜேந்திரன் , ஆகியோர் கலந்துக் கொண்டனர்.ஏற்பாடுகளை ஆனந்த பாலயோகி கிரி தலைமையில் சண்முகம், கஜேந்திரன், செல்வக்குமார், செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.