மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
01-Nov-2025
பாகூர்: கல்லுாரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். பாகூர் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். பாகூர் - கன்னியக்கோயில் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அந்த கடையில், 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த 3,560 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கடை உரிமையாளர் அரியாங்குப்பத்தை சேர்ந்த சித்ரா 59; என்பவர் மீது பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2025