உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்சநேய சுவாமி கோவிலில் நாளை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீபஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவிலில்நேற்று,ஹனுமன் ஜெயந்தி மற்றும் சீதா கல்யாணஉற்சவம்வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனையாட்டி,நேற்றுகாலை 2,000 லிட்டர் பால் மற்றும் வாசனை திரவியங்களால்அபிஷேகம் மற்றும்திருமஞ்சனம்நடந்தது. பின்னர், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, சுவாமிக்கு விசேஷ அலங்காரம் செய்து, 120 கிலோ ஏலக்காய் மாலை சாற்றி, பகல் 12:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பஷ்ப விருஷ்டி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை சீதா திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,நாளை அதிகாலை2:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், தனுார் மாத பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, விடியற்காலை 5:00 மணி முதல், பக்தர்களுக்கு சிறப்புதரிசனம் நடைபெறும்.பக்தர்கள், 106 திவ்ய தேசங்களுக்கு சென்று புண்ணிய நதிகளில் புனித நீராடிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சுவாமியின் ஸ்வர்ண பாதுகையை அருகில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்குஇனிப்புடன் கூடிய பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை