உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா

புதுச்சேரி : பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில், 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கடந்த 7ம் தேதி துவங்கி நாளை மறுநாள் 11ம் தேதி வரை நடக்கிறது.விழாவையொட்டி, நேற்று காலை துவங்கிய லட்சார்ச்சனை வரும் 11ம் தேதி காலை 8:00 மணி வரை நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, தனுர் மாத பூஜை துவங்குகிறது. காலை 6:00 மணிக்கு மேல் யாகசாலையில் 7ம் கால ஹோமம் நடக்கிறது.பின், காலை 8:30 மணிக்கு 2,000 லிட்டர் பால் அபிஷேகம், வாசனை திரவியங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு யாகசாலை மகா பூர்ணாஹூதி முடிந்து, கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு 130 கிலோ எடை ஏலக்காய் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட உள்ளது.அன்று மாலை 4:00 மணிக்கு ஸ்ரீராமர் சீதை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, சீதா திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பகல் 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மேனஜிங் டிரஸ்ட் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை