புதுச்சேரி : உலகம் முழுவதும்இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி மக்களுக்கு கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் தமிழிசை
இந்த புத்தாண்டில், அன்பையும், வாழ்த்துகளையும் அனைவரோடும் பரிமாறி கொள்வோம். ஒற்றுமை உணர்வோடும் சமத்துவ சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடு நடை போடும் வகையில் கடமையாற்ற உறுதியேற்போம். இந்தாண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வாழ்த்துக்கள். முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் அனைத்து சமூக மக்களும் பயன்பெறும் வகையில், இன்னும் பல வளர்ச்சித்திட்டங்கள் வரும், 2024ம் ஆண்டிலும் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும், புதிய மகிழ்ச்சி, புதிய இலக்குகள், புதிய சாதனைகள் மற்றும் பல புதிய உத்வேகங்களை கொண்டு வரட்டும்.இதேபோல, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, பா.ஜ., மாநிலத்தலைவர் செல்வ கணபதி எம்.பி.,முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், ஓ.பி.எஸ் அணி செயலாளர் ஓம்சக்தி சேகர், அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பா.ம.க அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூ., செயலாளர் சலீம், மக்கள் நீதி மைய தலைவர் சந்திரமோகன், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.