உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைமை ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு

தலைமை ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு

புதுச்சேரி; பத்து ஆண்டுகளுக்கு பிறகு தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி கல்வித் துறையில் பணியாற்றும் தலைமையாசிரியர்களுக்கு நீண்ட நாட்களாகவே பதவி உயர்வு இல்லை.குறிப்பாக, தலையாசிரியர்களுக்கு (நிலை-2) கோர்ட் வழக்கு நிலுவை காரணமாக கடந்த 2015ம் ஆண்டு முதல் தலைமையாசிரியர் நிலை-1 பதவி உயர்வு கொடுக்கப்படவில்லை. இது தலைமையாசிரியர்கள் மத்தியில் விரத்தியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அவர்கள் முறையிட்ட வந்த சூழ்நிலையில், இருவரும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து பதவி உயர்வு அளிக்க உத்தரவிட்டனர்.அதையடுத்து, தற்போது 63 தலையாசிரியர்களுக்கு நிலை-2 இருந்து, தலைமையாசிரியர் நிலை-1 ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித் துறை வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பதவி உயர்வு வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பல்வேறு பள்ளிகளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் 14ம் தேதிக்குள் தலைமையாசிரியர்களை அந்தந்த பள்ளிகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என, கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ