மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முற்றுகை காங்., நிர்வாகிகள் கைது
22 hour(s) ago
வாய்க்கால்களை துார் வார தி.மு.க., மருத்துவர் அணி மனு
22 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்த கனமழையால் தாழ்வான நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்ற தால் மக்கள் அவதிய டைந்தனர். அந்தமான் கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில், நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியில் இருந்து நேற்று காலை 9:00 மணி வரை, 5.53 செ.மீ., மழை பெய்தது. தொடர்ந்து, விட்டு, விட்டு பெய்த கனமழையில், புதுச்சேரி ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், வெங்கட்டா நகர், பூமியான்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டனர். அதேபோல, இந்திரா சதுக்கம், புஸ்சி வீதி, பாரதி வீதி, கிழக்கு கடற்கரை சாலை, திருவள்ளுவர் சாலை, சின்னசுப்பராயப்பிள்ளை வீதி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சாலையில் தேங்கிய மழை நீரை, பொதுப்பணித் துறை, நகராட்சியினர் ராட்சத மோட்டார் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழையால், புதுச்சேரி கடற்கரை பகுதி, சுற்றுலா இடங்கள், கோவில் தலங்களில், வியாபார இடங்களில் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 28ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
22 hour(s) ago
22 hour(s) ago