உள்ளூர் செய்திகள்

கடும் பனிப்பொழிவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று பல இடங்களில் பனி பொழிவு அதிகமாக இருந்தது.மார்கழியின் முதல் அடையாளம் பனி. மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து காலை மற்றும் மாலை நேரத்தில் பனி பொழிவு இருந்து வந்தது. நடுவில் சில நாட்கள் மழை பெய்ததால் பனி குறைந்து இருந்தது.இந்த நிலையில் மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று போகி பண்டிகை என்பதால் புதுச்சேரி முழுதும் தேவையற்ற பொருட்கள் மக்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த புகை ஏற்கனவே நிலவும் பனியுடன் சேர்ந்து கொண்டது.இதனால் வழக்கமான அளவை விட பனிப் பொழிவு அதிகமாக காணப்பட்டது. சாலைகள் தெரியாதபடி பனி நிலவியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை