உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்டாயம் ஹெல்மெட் சீனியர் எஸ்.பி., அறிவுரை

கட்டாயம் ஹெல்மெட் சீனியர் எஸ்.பி., அறிவுரை

அரியாங்குப்பம் : கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சீனியர் எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.புதுச்சேரியில், இன்று முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட், அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியாங்குப்பம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, தலைமை தாங்கினார். போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எங்களுக்காக, ஹெல்மெட் அணியாமல், தங்களின் பாதுகாப்பு கருதி, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம், ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என சீனியர் எஸ்.பி.,பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, போக்குவரத்து வீதிமுறை குறியீடுகள் குறித்து சரியான பதிலளித்தவர்களுக்கு இலசமாக ெஹல்மெட் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி