உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு அலுவல் விதிகளில் திருத்த செய்ய உயர்மட்ட கமிட்டி! புதிய துறைகளுக்கு தனி அதிகாரம் கிடைக்க வாய்ப்பு

புதுச்சேரி அரசு அலுவல் விதிகளில் திருத்த செய்ய உயர்மட்ட கமிட்டி! புதிய துறைகளுக்கு தனி அதிகாரம் கிடைக்க வாய்ப்பு

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் அலுவல் விதிகளில் காலத்துகேற்ப மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு செயல்படும் விதம் குறித்து கடந்த 1963ம் ஆண்டு இயற்றப்பட்ட புதுச்சேரி அரசு அலுவல் விதிகள் எடுத்துரைக்கின்றது.முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ள அதிகாரங்கள், அரசு துறைகள் எப்படி செயல்பட வேண்டும் என்று இந்த அரசு அலுவல் விதிகள் பட்டியலிடுகின்றன. இதுமட்டுமின்றி, நிதித் துறை, சட்டத் துறைகளில் பொறுப்புகள், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் ஆணைகளின் போது, அரசு எப்படி செயலாற்ற வேண்டும் என்றும் அரசு அலுவல் விதிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.கடந்த 1963ம் ஆண்டு உள்துறை மூலம் பார்லிமெண்ட்டில் இயற்றப்பட்ட இந்த புதுச்சேரி அரசின் அலுவல் விதிகளில் காலத்துகேற்ப திருத்தங்களை ஏற்படுத்த புதுச்சேரி முடிவு செய்துள்ளது.இதற்காக தலைமை செயலர் சரத் சவுன்கான் சேர்மனாக கொண்டு புதிய உயர்மட்ட கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நிதித் துறை செயலர் ஆஷிஷ் மாதவராவ் மோரே, போக்குவரத்து செயலர் முத்தம்மா, சட்டத் துறை செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கமிட்டியின் உறுப்பினர் செயலராக நிர்வாக சீர்த்திருத்த துறை செயலர் கேசவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிட்டி மூன்று மாதத்திற்குள் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததும் உள்துறை வாயிலாக பார்லிமெண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அதிகாரம் கிடைக்கும்

புதுச்சேரி அரசின் அலுவல் விதிகள் ஒவ்வொரு துறையின் கீழ் உள்ள இயக்குனரகத்தை தெளிவாக பட்டியலிட்டுள்ளது. உதாரணமாக கல்வித் துறையின் கீழ் முன் துவக்க கல்வி, துவக்க கல்வி, நடுநிலை உயர்நிலை கல்வி, மேனிலை கல்வி, கல்லுாரி கல்வி, தொழில்நுட்ப கல்வி 16 வகையான பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பள்ளி கல்வி துறை இயக்குனரகம், உயர் கல்வி துறை இயக்குனரகம் ஆகியவை வேகமாக பெரிய துறைகளாக வளர்ந்துவிட்டன. ஆனால் இன்னும் கல்வித் துறை கீழ் இயக்குனரகமாக உள்ளன. அரசு அலுவல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும்போது இவை தனி துறைகளாக உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதேபோல் நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்ப யுகத்தில் புதிய துறைகளாக உருவாகியுள்ளன. குறிப்பாக தட்ப வெப்ப நிலை, சுற்றுச்சூழல், தோட்டக்கலை, ஆயூஷ், நடுத்தர சிறு, குறு தொழிற்துறை, வாழ்வாதார இயக்கம், முதலீடு ஊக்குவிப்பு தனி துறையாக உருவெடுத்துள்ளன. ஆனால் புதுச்சேரி அரசு அலுவல் விதிகளில் இவை இடம் பெறவில்லை.எனவே அலுவல் விதிகளில் திருத்தம் செய்யப்படும்போது, இவை புதிய துறைகளாகவும், தனி இயக்குனரகமாகவும் அதிகாரத்துடன் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது இரண்டாவது துறை

கடந்த 01.07.63 இல் இயற்றப்பட்ட புதுச்சேரி அரசு அலுவல் ஒதுக்கீடு விதிகளில்,கடைசியாக 13.03.85 அன்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பாண்டிச்சேரி என்பதை புதுச்சேரி என்று மாற்றியமைக்கப்பட்டது.ஆனால் வளர்ந்துள்ள புதிய துறைகள், இயக்குனரகங்கள் அப்டேப் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Pattabiraman Vengeteraman
ஜூன் 10, 2024 20:44

Good initiative. But then have to work fast as I see at least a decade back in every single sphere compared to Tamil nadu. Pondicherry certainly lacks skilled workforce especially in govt. dept & quasi govt. bodies. Today Pondicherry is a mere population exploded village


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை