உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாணவர்களுக்கு உயர் கல்வி பயிற்சி முகாம்

 மாணவர்களுக்கு உயர் கல்வி பயிற்சி முகாம்

புதுச்சேரி: நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு, உயர் கல்வி, சுய முன்னேற்றப் பயிற்சி முகாம் நடந்தது. விரிவுரையாளர்ஜெகதீசன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் வாசன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சாந்தி முகாமை துவக்கி வைத்தார். மனநல ஆலோசகர்கள் பன்னீர்செல்வம் மற்றும் குப்புசாமி ஆகியோர் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் மனம் மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்து பயிற்சி அளித்தனர். புதுச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளருமான அரிமதி இளம்பரிதி உயர்கல்வி, போட்டித் தேர்வுகளை எழுதும் முறைகள், சுயக்கட்டுப்பாடு, ஒழுக்க மேலாண்மை, மனித வளம், சமூக ஊடகங்களை கையாளும் முறைகள், வாசிப்புப் பழக்கம், பேச்சாற்றல் மற்றும் தலைமைப் பண்பு உள்ளிட்டவை குறித்து பேசினார். போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பேட்ஜ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விரிவுரையாளர் சுபா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை