உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷனை இந்து முன்னணியினர் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷனை இந்து முன்னணியினர் முற்றுகை

காரைக்கால் : காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனை, இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.ஹிந்து கடவுள் ராமர், பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோரை விமர்சித்து காரைக்காலை சேர்ந்த அன்சாரி பாபு சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் நகர தலைவர் ராஜ்குமார், சிவசுப்ரமணியன் உள்ளிட்டோர் நேற்று காலை 11:30 மணியளவில் காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் புருேஷத்தமன், சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவம் தொடர் பாக அன்சாரி பாபு மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ