மேலும் செய்திகள்
கூலி தொழிலாளி சாவு
17-Oct-2024
புதுச்சேரி: மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி தர்மாபுரி தனக்கோடி நகர் விரிவாக்கம், சுப்பையா வீதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, கோர்ட்டில் எம்.டி.எஸ்., ஊழியர். இவரது மகன் சதீஷ்குமார் 34, இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சதீஷ்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால் மன அழுத்தத்தில் இருந்த சதீஷ்குமார் தீபாவளி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை பின்புறம் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Oct-2024