உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி பிரிந்து சென்றதால் கணவர்  தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர்  தற்கொலை

புதுச்சேரி: மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி, வெங்கட்டா நகர், ஓம் சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி, 47; இவர் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். அதிகமாக மது குடித்ததால், கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த 31ம் தேதி இவரது மனைவி கோபித்து கொண்டு, வெளியே சென்றார். இதனால், மனமுடைந்த கந்தசாமி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ