மேலும் செய்திகள்
உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி
09-Sep-2025
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு மையத்தில், சர்வதேச இயன் மருத்துவ தின விழா நடந்தது. சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி முன்னிலை வகித்தனர். எலும்பியல் துறைத் தலைவர் துபே, மருத்துவர்கள் நேதாஜி, சாந்த மூர்த்தி, முதுநிலை இயன் மருத்துவர் சித்ரா ஆகியோர் இயன் மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். இதில், பிற இயன் மருத்துவர்கள், மதர் தெரசா இயன் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
09-Sep-2025