உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஹரி ஹரி திருநாமத்தை சொன்னால் சரணாகதி பேறு கிடைக்கும் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம்

 ஹரி ஹரி திருநாமத்தை சொன்னால் சரணாகதி பேறு கிடைக்கும் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம்

புதுச்சேரி: ஹரி ஹரி எனும் திருநாமத்தை அனுதினம் சொல்வதால் பக்தி யோகம் ஏற்பட்டு சரணாகதி பண்ணும் பேறு கிட்டும் என, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்தார். ராமானுஜரின் 1008ம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, கிஞ்சித்காரம் அறக்கட்டளை, புதுச்சேரி கிளை சார்பில், மூன்று நாள் உபன்யாசம் கடந்த 14ம் தேதி துவங்கியது. லாஸ்பேட்டை விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் நடந்த இரண்டு நாள் உபன்யாசத்தில், ராமன் பின்பற்றிய சாமான்ய தர்மம் , கிருஷ்ணன்பின்பற்றிய விசேஷ தர்மத்தைப் பற்றி விளக்கி கூறினார். மேலும் ஆச்சார்யர்கள் செய்தவற்றையெல்லாம் நம்மால் பின்பற்ற முடியாவிட்டாலும் நம்மால் முடிந்த தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கினார். கடைசி நாளான நேற்று 'ஹரே ஹரே' என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் சிறப்பு உபன்யாசம் செய்தார். ஹரே ராம என்பதில் ஹரியாகிய நாராயணன் ஆபத்துகளை போக்குகிறார். ராமன் கண்டவர்களுக்கெல்லாம் நன்மைகளை தருகிறார், ஹரே கிருஷ்ண என்பதில் கிருஷ்ணன் நீருண்ட கார்மேகம் போல் கருணை குறையாதவராக நம் குறைகளை போக்குகிறார். பூமிக்கு ஆனந்தத்தை கொடுப்பவன் என்று உணர்த்தினார். ஹரி என்கிற ஜீவாத்மாபரமாத்மாவின் சொத்து. அதை எவ்வாறு ஆஹூதி செய்வதின் மூலம்அறிந்துக்கொள்வதைப் பற்றி உபதேசித்தார். ஹரி ஹரி என்ற நாமத்தை ஒருவர் சொன்னால்,காசி, கயா, காவேரி, சிந்து, சரஸ்வதி முதலிய புண்ணிய நதிகள் அவரிடம் இருக்கும். வாரணாசி, குருேஷ த்ரம் சென்ற பலன், தானம் கொடுத்த பலன், யாகம் செய்த பலன், நான்கு வேதங்களைக் கற்றவர்,வேதம் சொன்ன பலன்கள் கிட்டும் என்பதை விளக்கினார். ஹரி ஹரி எனும் திருநாமத்தை அனுதினம் சொல்வதால்பக்தி யோகம்ஏற்பட்டு சரணாகதி பண்ணும் பேறு கிட்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ