| ADDED : பிப் 14, 2024 03:42 AM
புதுச்சேரி : புதுச்சேரியில், மத்திய அரசை கண்டித்து நடக்க உள்ள, வேலை நிறுத்த மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித்தலைவர் சிவா அழைப்பு விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்களை இணைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க தொழிலாளர் முன்னேற்றச் சங்க தலைமையின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தலைமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது.இந்த போராட்டம், வரும், 16 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ஒதியஞ்சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து பேரணியாக சென்று பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு நடத்தப்படுகிறது.இதில் இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள், அதில் இடம்பெற்றுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தி.மு.க.,வில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட கட்சி அமைப்பினர், பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.