உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தை நல  வழிகாட்டல் மையம் திறப்பு விழா

குழந்தை நல  வழிகாட்டல் மையம் திறப்பு விழா

புதுச்சேரி : பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை நல வழிகாட்டல் மையத்தினை கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி திறந்து வைத்தார்.பிம்ஸ் மருத்துவமனை குழந்தை நலத் துறையில், சிறப்பு வழிக்காட்டல், முன்னெச்சரிக்கை, தொழிற் பயிற்சி, விளையாட்டு பகுதி, மணல் விளையாட்டு, உணர்ச்சி பாதை கொண்டு முழுமையான விரிவுபடுத்தப்பட்ட குழந்தை நல வழிகாட்டல் மையம் திறப்பு விழா நடந்தது.கல்லுாரி குழந்தை நல மருத்துவத் தலைவர் பீட்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் குழந்தை நல மையத்தை திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் ரேணு, குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் நிஷாந்த், பிரியா ஜோஸ், ஒருங்கிணைப்பாளர் சாந்திகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ