| ADDED : ஜன 08, 2024 04:51 AM
புதுச்சேரி: புதுச்சேரி, வாசவி கிளப் இன்டர்நேஷனல்,வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி பிசினஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.வாசவி கிளப் இன்டர்நேஷனல்,வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி பிசினஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதவியேற்பு விழா செண்பகா ஹோட்டலில் நடந்தது.தலைவர்களாக ராமலிங்கம், ரூபிணிமோகன், ராஜேஷ், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், யோகலட்சுமி, ராமகிருஷ்ணன் பொருளாளர்களாக ஹானிமன், சித்ரா ரமேஷ், பிரவீன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆளுநர் ஆதிகேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து, புதிய தலைவராக பொறுப்பேற்ற ராமலிங்கம் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார். நிகழ்ச்சியில், பாலமுருகன், சதிஷ்குமார் உட்பட நிர்வாகள் பலர் பங்கேற்றனர்.