| ADDED : மார் 16, 2024 11:09 PM
புதுச்சேரி: வேல்ராம்பட்டில் ரூ. 22.86 கோடி மதிப்பில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.முதலியார்பேட்டை தொகுதி, இன்ஜினியர்ஸ் காலனியில் 22.86 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.பெருகி வரும் மக்கள் தொகை, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களின் குடிநீர் தேவைகளை பூத்தி செய்யவதற்கும், ஹட்கோ நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது.இதன் மூலம்,திருப்பூர் குமரன் நகர், சப்தகிரி நகர், கோல்டன் நகர், இன்ஜினியர்ஸ் காலனி, ஜெயமூர்த்தி ராஜா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர் பகுதியில் குடியிருக்கும் 16 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.நிகழ்ச்சியில், சம்பத் எம்.எல்.ஏ., அரசு செயலர் கேசவன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவிப்பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர்கள் தணிகைவேல், ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.