உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி கட்டடம் திறப்பு

பள்ளி கட்டடம் திறப்பு

புதுச்சேரி : சன்னியாசிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதுப்பித்த கட்டடம் திறப்பு விழா, மகளிர் தின விழா நடந்தது.முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் டேனியல் அந்தோணிராஜ் லியோன் வரவேற்றார்.அங்காளன் எம்.எல்.ஏ.,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பள்ளிக்கு பல்வேறு உதவிகள் வழங்கிய தனியார் தொழிற்சாலைகள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியை செந்தமிழ்செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ