உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முக்கிய திட்டங்களுக்கு அனுமதி கவர்னரின் செல்வாக்கு அதிகரிப்பு

முக்கிய திட்டங்களுக்கு அனுமதி கவர்னரின் செல்வாக்கு அதிகரிப்பு

புதுச்சேரி: ரேஷன் கடை திறப்பு, இலவச அரிசி, சட்டசபை கட்டுதல் போன்ற பெரிய திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ள சூழ்நிலையில், கவர்னருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேச அரசிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் - கவர்னர் இடையே அதிகாரப் போட்டி என்பது கடந்த நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சியிலேயே பெரிய அளவில் துவங்கியது. அப்போது கவர்னராக இருந்த கிரண் பேடி தமக்கே அதிகாரம் இருப்பதாக கூறி, அரசின் பல நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார்.அதன் பிறகு, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் ரங்கசாமி முதல்வரானார். தமிழகத்தை சேர்ந்த தமிழிசை, ராதாகிருஷ்ணன் கவர்னர்களாக இருந்தபோது, முந்தைய ஆட்சியில் இருந்த மோதல் போக்கு இல்லை என்றாலும், ரேஷன் கடை திறப்பு, இலவச அரிசி, சட்டசபை கட்டுதல் போன்ற பெரிய திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், கவர்னராக கைலாஷ்நாதன் பொறுப்பேற்ற பிறகு காட்சிகள் மாறின. கவர்னர் - முதல்வர் இடையே இணக்கமான சூழல் உள்ளது. ரேஷன் கடை திறப்பு, இலவச அரிசி திட்டம், ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.சட்டசபை கட்டுதல் திட்டத்திற்கும், வவுச்சர் ஊழியர்களின் 18 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோப்பிற்கும் அனுமதி தந்துள்ளார். இதனால் கவர்னருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் கவர்னரை பாராட்டி எப்போதும் இல்லாத அளவிற்கு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை