உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூரில் இந்திய கம்யூ., அரசியல் விளக்க கூட்டம்

பாகூரில் இந்திய கம்யூ., அரசியல் விளக்க கூட்டம்

பாகூர் : பாகூரில் இந்திய கம்யூ., கட்சியின் 'அரசியல் விளக்க பொதுக் கூட்டம்' நடந்தது.இந்திய கம்யூ., கட்சி பாகூர் தொகுதி குழு சார்பில் நடந்த அரசியல் விளக்க கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ரவீந்திரன், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருப்பூர் சுப்பராயன் எம்.பி., கலந்து கொண்டு, பா.ஜ., ஆட்சியை அகற்றி, இண்டியா கூட்டணி வெற்றி பெற செய்திட வேண்டும். புதுச்சேரி பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியை கண்டித்து சிறப்புரையாற்றினார்.மாநில செயலாளர் சலீம், தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர் அமுதா, மாநில குழு உறுப்பினர் விஜயபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை