மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இந்திய பொது நிர்வாக நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. டில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனம் கடந்த 1954ம் ஆண்டு முதல் மத்திய அரசின் பணியாளர் குறை தீர்க்கும் துறையின் அங்கமாக செயல்பட்டு வருகின்றது. இந்திய பொது நிர்வாக நிறுவனம் பொது நிர்வாக கல்வி,ஆராய்ச்சி,ஆசிரியர்கள்,மாணவர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக 130 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகின்றது.அதனை தொடர்ச்சியாக புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இந்திய பொது நிர்வாக நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் துணைவேந்தர் தரணிக்கரசு முன்னிலையில், பல்கலைக்கழக பதிவாளர் ரஜினிஷ் பூட்டானி,டில்லி இந்திய பொது நிர்வாக நிருவன சார்பில் புதுச்சேரி கிளை தலைவர் தனபால் ஆகியோர் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குனர் கிளமென்ட் லுார்டு,இந்திய பொது நிர்வாக நிறுவன புதுச்சேரி மண்டல கிளை பேராசிரியர் சாருமதி,பல்கலைக்கழக புல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago