| ADDED : நவ 22, 2025 05:36 AM
புதுச்சேரி: ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தேசிய பச்சிளம் சிசு பராமரிப்பு வார நிறைவு விழா நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் வரவேற்றார். குழந்தை நலத்துறை தலைவர் அனுராதா, சிறப்பு புதிதாக பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவு தலைவர் சரவணன், குழந்தை நல டாக்டர்கள் ரவிகண்ணன், முரளி, ஜிப்மர் டாக்டர் முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், பச்சிளம் சிசுக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.