உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாய்மை பணி துவக்கம்

துாய்மை பணி துவக்கம்

புதுச்சேரி, : புதுச்சேரி பாரதி பூங்காவில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் துாய்மைப்படுத்தும் பணி துவங்கியது.புதுச்சேரியின் அடையாளமாகவும், முக்கிய சுற்றுலா தலமாகவும் பாரதி பூங்கா உள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.பூங்காவில் மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு, துாய்மைப்படுத்தும் பணி நேற்று காலை துவங்கியது.நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.இதன் மூலம் சுய உதவிக்குழு பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த, வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக, 20 சுய உதவிக்குழு பெண்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி