உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கியாளர் குழுமம் சார்பில் காப்பீடு தொகை வழங்கல்

வங்கியாளர் குழுமம் சார்பில் காப்பீடு தொகை வழங்கல்

புதுச்சேரி: வங்கியாளர் குழுமம் சார்பில், காப்பீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடந்தது. கோரிமேடு இந்திரா நகர்,சமுதாய நலக்கூடத்தில்,மத்திய நிதி அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, நீண்ட காலமாக உரிமை கோரப் படாத வங்கி வைப்புத் தொகை, காப்பீட்டு தொகை, பங்கு தொகை ஆகியவை உரிமையாளர்கள், வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் நடந்தது. மாநிலவாங்கியாளர் கூட்டமைப்பு சார்பில், அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகை, காப்பீட்டுத் தொகை,பங்குகள், மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து வங்கி அதிகாரிகள், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், 10 ஆண்டிற்கு மேலாக, செயல்படாத வங்கி கணக்குகள் மற்றும் பணம் கோரப்படாத வைப்புத் தொகை, ரிசர்வ் வங்கி ்ரீ( டி.இ.எ.எப்) கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இதன் விவரங்களை ஆர்.பி.ஐ., (https://udgam.rbi.org.in) என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அனைத்து வங்கி கிளை அலுவலகங்களில், டிசம்பர் 31ம் தேதி வரை, இது தொடர்பாக, முகாம் நடப்பதையொட்டி, இந்த வாய்ப்பினை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, வங்கியாளர் கூட்டமைப்பு சார்பில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை