சர்வதேச கருத்தரங்கம் நிறைவு
புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியன் சொசைட்டி பார் ஸ்டடி ஆப் அனிமல் ரீபுரொடக் ஷன் சார்பில், மாறிவரும் உலகில் இனப்பெருக்கம் என்ற தலைப்பில் மூன்று நாள் நடந்த சர்வதேச கருத்தரங்கின் நிறைவு விழா நடந்தது. டாக்டர் அப்துல் கலாம் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் காந்தராஜ் வரவேற்றார். 3 நாட்கள் நடந்த கருத்தரங்கில் அமெரிக்கா, ஸ்பெயின், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் மற்றும் 400 துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர். சிறந்த ஆராய்ச்சி முடிவுகளை கொடுத்த விஞ்ஞானிகளுக்கு ஐ.எஸ்.எஸ்.ஏ.ஆர்., சங்கத்தின் தலைவர் சிவபிரசாத் பரிசுகளை வழங்கி, கவுரவித்தார். இளம் ஆராச்சியாளர்களுக்கு இளம் விஞ்ஞானி பட்டம் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் உருவான பரிந்துரைகளை அரசின் கொள்கை வகுப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. கரு த்தரங்கில் சங்க பொது செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். புல முதல்வர் முருகவேல் நன்றி கூறி னார்.