மேலும் செய்திகள்
மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
22-Jun-2025
புதுச்சேரி : புதுச்சேரி, கம்பளிசாமி மடத்தில் ஸ்கூல் ஆப் யோகா சிகிச்சை, இன்ஸ்டிடியூட் ஆப் சலடோஜனஸிஸ் அண்ட் காம்பிளிமென்டிரி மெடிசன் பாலாஜி வித்யா பீத், ஆயூஷ் அமைச்சகம், மத்திய ஆராய்ச்சி யோகா மற்றும் இயற்கை மையம், இந்தியன் யோகா சங்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா செயல்முறை பயிற்சி நடந்தது.பாலாஜி வித்யா பீத் துணை வேந்தர் பிஸ்வாஸ், ஆனந்த ஆசிரம யோகாச்சாரனி மீனாட்சி தேவி பவனானி யோகா செயல்முறை பயிற்சியை துவக்கி வைத்தனர்.பாலாஜி வித்யா பீத் பதிவாளர் சீனிவாசன் வரவேற்றார். இயக்குனர் ஆனந்த பால யோகி பவனானி முன்னிலை வகித்து, யோகா செயல்முறை குறித்து விளக்கினார். இந்தியன் யோகா சங்கத்தின் மதன்மோகன், உத்ரேஷ்வர், வர்மா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இந்தியன் யோகா சங்கம், சித்தர் பூமி யோகா சன விளையாட்டு சங்கம், ஆனந்த ஆசிரமம், யோகாஞ்சலி நாட்டியாலயம், கீதாஞ்சலி யோகா சென்டர், இன்ஸ்டிடியூட் ஆப் சலேடோஜனசிஸ், சுவாமி விவேகானந்தா யோகா சென்டர் மாணவ, மாணவிகள் பங்கேற்று யோகா செயல்முறை பயிற்சி அளித்தனர்.சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க துனைத் தலைவர் தேவசேனா பவனானி, செயலாளர் தயாநிதி, பொருளாளர் சண்முகம், மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன், உறுப்பினர்கள் லலிதா சண்முகம், செல்வநாதன், செந்தில்குமார், ஜான் பீட்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.யோகா ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. சங்க துணை செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.
22-Jun-2025