உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனி ஊழியருக்கு மிரட்டல்

தனியார் கம்பெனி ஊழியருக்கு மிரட்டல்

நெட்டப்பாக்கம்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிவேல், 36; இவர் நெட்டப்பாக்கத்தில் தங்கி, ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெரியாண்டவர், செந்தில்குமார் ஆகியோரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதற்காக பழனிவேல் வட்டி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியாண்டவர், செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பழனிவேலை வழிமறித்து பணத்தை கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை