உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., நகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி தலைவர்கள் அறிமுகம் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.புதுச்சேரி பா.ஜ., நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மோகன்குமார் பங்கேற்றார். வரும் லோக்சபா தேர்தலை நம் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் பணியாற்றி, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், பொறுப்பாளர் செல்வகணபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள், கணேசன், செந்தில்குமார், பொருளாளர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ