உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தை கடத்தல் வதந்தி வட மாநிலத்தவரிடம் விசாரணை

குழந்தை கடத்தல் வதந்தி வட மாநிலத்தவரிடம் விசாரணை

பாகூர்: பாகூரில் பள்ளி மாணவனை கடத்த முயன்றதாக வடமாநில இளைஞர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.நேற்று மாலை பாகூர் தெற்கு வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சுற்றித்திறிந்த வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள், மாணவனை கடத்த முயன்றதாக கூறி, அவர்களை பொது மக்கள் பிடித்து, பாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்த பொதுமக்கள் ஸ்டேஷன் முன் திறண்டனர். பிடிபட்ட வடமாநில இளைஞர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் விசாரணை நடத்தினார். அதில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவரும், விழுப்புரத்தில் தங்கி புதுச்சேரி மற்றம் தமிழக கிராம பகுதியில் பெட்ஷீட் விற்பனை செய்து தெரியவந்தது. மேலும் பாகூரில் பெட்ஷீட் விற்பனை செய்தபோது, பள்ளி மாணவனை கடத்தல் முயன்றதாக, பொது மக்கள் அவர்களை பிடித்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !