உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகின

ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகின

ஜம்மு :' ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்த நிலையில், கடந்த ஏழு தேர்தலில் இல்லாத அளவிற்கு 59 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, 10 ஆண்டுகளுக்கு பின் அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. அதன்படி, 24 தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன. காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை தேர்தல் அதிகாரி பி.கே. போலே கூறியதாவது: முதற்கட்ட ஓட்டுப்பதிவு அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சில இடங்களில் கைகலப்பு, வாக்குவாதங்கள் அரங்கேறினாலும், குறிப்பிட்டு சொல்லும்படியான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த தேர்தலில் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிபரம் மாறுபடவும் வாய்ப்புள்ளது. கடந்த ஏழு தேர்தல்களில் பதிவான ஓட்டுப்பதிவை விட இது அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ