உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜெயலலிதா பிறந்த நாள் விழா பெண்களுக்கு கோலப்போட்டி

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பெண்களுக்கு கோலப்போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் நடந்த கோலப்போட்டியில், வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 76வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் கோலப்போட்டி, நேற்று காலை கடற்கரை சாலையில் நடந்தது. இதில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர துணை செயலாளர் விமலா ஸ்ரீ முன்னிலை வகித்தார். இந்த போட்டியில், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பெண்கள் கலந்து கொண்டு அ.தி.மு.க., முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்களின் உருவங்கள், இரட்டை இலை உள்ளிட்ட கோலங்களை வரைந்தனர். இதைத் தொடர்ந்து, உப்பளம், அம்பேத்கர் சாலை, கட்சி அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு - வாஷிங் மிஷின்; 2ம் பரிசு - பிரிட்ஜ்; 3ம் பரிசு - டி.வி., தையல் இயந்திரம், கேஸ் அடுப்பு, துாக்குவாலி, வாணல், பால் குவளை, ஹாட் பாக்ஸ், என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை