நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: அழுகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு, பல்வேறு தொழில், வேலை வாய்ப்பு தொடர்பாக பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, அழுகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர வரும் 7ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி 11ம் தேதி துவங்குகிறது. இலவச, பயிற்சியில் சேர, 8ம் வகுப்பு படித்திருக்கவேண்டும். 18 முதல் 45 வயதுடைய, புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். பயிற்சி காலங்களில், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 13 நாட்கள் பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், 9043489659, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.